பாவேந்தர் பாரதிதாசனைப் போற்றும் தமிழ் வார விழா...முதலமைச்சர் சிறப்புரை!!

 
Bharathidasan Bharathidasan

பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள் விழாவாக கொண்டாடப்படும் தமிழ் வார விழாவின் நிறைவு விழா இன்றுசென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் விழாவுக்கு முன்னிலை வகிக்கின்றனர்.

பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள் தமிழ் வார விழாவாக கொண்டாடப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29-ந் தேதி தொடங்கி மே 5-ந் தேதி (இன்று) வரை தமிழ்நாடு முழுவதும் தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்றும், இந்த விழாவில் கவியரங்கங்கள், இலக்கிய கருத்தரங்குகள், பேச்சுப்போட்டி, கட்டுரை, கவிதை, கலைப்போட்டிகள், தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழ் வளர்ச்சித்துறை, செய்தித்துறை, கலை பண்பாட்டுத்துறை என பல்வேறு அரசு துறைகள் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தன. அதன்படி, மாநிலம் முழுவதும் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். இன்றைய நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.

From around the web