தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும்!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!!

தமிழ்நாட்டு உரிமைகளைக் காக்க மக்கள் மன்றத்தில் நமது போராட்டங்களை எடுத்துச் செல்லுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் செய்தியாக திமுகவினருக்கு கூறியுள்ளார்.
இந்தித்திணிப்பை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை மறுசீரமைப்பை ஒன்றிய அரசு செய்கிறது. தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க மாட்ட்டோம் என்று சொல்லிக்கொண்டே அதைத் தான் செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டு எம்.பி,க்களின் எண்ணிக்கையை குறைக்க மாட்டோம் என்று சொல்பவர்கள் மற்ற மாநிலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாட்டோம் என்று சொல்ல மறுக்கிறார்கள்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களை தண்டிக்காதீர்கள். இந்தியாவுக்கே வழிகாட்டியாக நாம் எழுப்பிய எதிர்ப்புக் குரலுக்கு கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா மாநிலங்கள் ஆதரவாக வந்துள்ளனர். போராடி நமது உரிமைகளைக் காப்போம். தமிழ்நாட்டு உரிமைகளை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம்தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்று வீடியோவில் பேசி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நேற்று ஆங்கிலத்தில் இந்தி மொழி தின்று விழுங்கிய மொழிகள் என்று முதலமைச்சர் வெளியிட்ட பட்டியல் வட இந்தியாவில் பெரும் விவாதப் பொருளாக மாறி உள்ளது. தொலைக்காட்சி ஊடகங்களில் பங்கேற்கும் வட இந்தியர்கள் கூட போஜ்புரி, மைதிலி உள்ளிட்ட மொழிகள் இந்தியால் காணாமல் போய்விட்டதை ஒப்புக் கொள்கின்றனர். முதலமைச்சரின் பதிவு வட இந்தியர்களையும் தங்கள் தாய்மொழி குறித்து சிந்திக்க வைத்துள்ளது.
நாள்தோறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனநாயகரீதியாக எழுப்பி வரும் கேள்விகளும், பாஜகவினரின் நடவடிக்கைகளுக்கான எதிர்ப்பும் இந்தியா முழுவது விவாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.
ஒரே இலக்கு!
— M.K.Stalin (@mkstalin) February 28, 2025
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!#FairDelimitationForTN pic.twitter.com/zQ1hMIHGzo