வரும் 18-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம்

 
TVK

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் வரும் 18-ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டுள்ளார். இவர், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது.

Vijay

இதனிடையே, நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் வரும் 18-ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

TVK

விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்தும், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தும், பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடமும் நடிகர் விஜய், பொதுத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web