தமிழ்நாடு பாதிக்கப்படக்கூடாது...பாஜகவும் கருத்து சொல்லலாம்! கனிமொழி எம்.பி. அழைப்பு!!

 
kanimozhi

தமிழ்­நாடு பாதிக்­கப்­ப­டக் கூடாது என்­ப­தற்­கா­கவே முத­ல­மைச்­சர் அனைத்து கட்­சிக் கூட்­டத்தை நடத்­து­கின்­றார்! அர­சி­யல் வேறு­பா­டு­க­ளைக் களைந்து தமிழ்­நாட்­டின் நல­னுக்­காக அனைத்­துக் கட்­சி­க­ளும் கலந்து கொள்ள வேண்­டும்! என்று திமுக துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் மற்றும் நாடா­ளு­மன்­றக்­கு­ழுத் தலை­வர் கனி­மொழி எம்.பி வேண்­டு­கோள் விடுத்­துள்ளார்

தூத்­துக்­குடி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அலு­வ­ல­கத்­தில் நடந்த செய்­தி­யா­ளர் சந்­திப்பில் கனிமொழி எம்.பி. கூறியதாவது,

”தொகுதி மறு­சீ­ர­மைப்பு என்­பது தமிழ்­நாட்­டைப் பாதிக்­காத வகை­யிலே, தென்­மா­நி­லங்­க­ளைப் பாதிக்­காத வகை­யிலே, முக்­கி­ய­மாக மக்­கள் தொகை­யைக் கட்­டுப்­ப­டுத்­திய மாநி­லங்­க­ளைப் பாதிக்­காத வகை­யிலே செய்­யப்­பட வேண்­டும் என்­கிற கோரிக்­கையை முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் எழுப்பி இருக்­கின்­றார்­கள். அதற்­காக அனைத்து கட்சி கூட்­டத்­தை­யும் அழைத்து இருக்­கி­றார்­கள். வராத சில கட்­சி­க­ளி­டம், கெள­ர­வம் பார்க்­கா­தீர்­கள், இது தமிழ்­நாட்­டு­டைய நலனை மைய­மாக கொண்ட ஒரு கூட்­டம். அத­னால் நம் உரி­மை­க­ளுக்­காக இணைந்து நாம் குரல் கொடுக்க வேண்­டும். அத­னால் தனிப்­பட்ட விருப்பு வெறுப்­பு­க­ளுக்­காக தமிழ்­நாட்டு நல­னைப் பலி கொடுக்­கா­தீர்­கள் என்­றும் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

தொகுதி மறு­சீ­ர­மைப்பு என்­பது தமிழ்­நாட்­டைப் பாதிக்­கக்­கூ­டாது என்ற முத­ல­மைச்­ச­ரு­டைய கருத்­துக்கு சமீ­பத்­தில் தமிழ்­நாடு வந்த உள்­துறை அமைச்­சர் அமித் ஷா அவர்­கள், PRO RATA அடிப்­ப­டை­யில் மறு­சீ­ர­மைப்பு நடக்­கும், தமிழ்­நாட்­டிற்கு தொகு­தி­கள் குறை­யாது எனச் சொல்லி இருந்­தார்.

இது தெளி­வைத் தரு­வ­தற்­குப் பதி­லா­கப் பல குழப்­பங்­களை உரு­வாக்கி இருக்­கி­றது. ஏனென்­றால், இது­வரை எடுக்­கப்­பட்ட மக்­கள் தொகை கணக்­கெ­டுப்­புப் படி­தான் ஒவ்­வொரு முறை­யும் தொகுதி மறு­சீ­ர­மைப்பு நடந்­துள்­ளது. அதா­வது மக்­கள்­தொகை அடிப்­ப­டை­யில்­தான் செய்­யப்­பட்­டுள்­ளது.

மக்­கள் தொகை­யைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும் என்ற உணர்வு நாடு முழு­வ­தும் உரு­வாக்­கப்­பட்ட பிறகு, 1971 ஆம் ஆண்­டுக்கு பிறகு, மக்­கள் தொகை கணக்­கெ­டுப்பு அடிப்­ப­டை­யில் தொகுதி மறு­சீ­ர­மைப்­பும் நிறுத்தி வைக்­கப்­பட்டு இருக்­கி­றது.சில மாநி­லங்­கள் இந்த மக்­கள்­தொ­கை­யைக் கட்­டுப்­ப­டுத்­து­வதை முக்­கி­ய­மாக எடுத்­துக்­கொண்டு, அதில் வெற்றி பெற்று இருக்­கி­றார்­கள். பல மாநி­லங்­கள் மக்­கள்­தொ­கைக் கட்­டுப்­பாட்­டில் சீரிய முறை­யில் கவ­னம் செலுத்­த­வில்லை; அந்த மாநி­லங்­க­ளில் மக்­கள் தொகை அதி­க­ரித்து இருக்­கி­றது.

அப்­ப­டிப்­பட்ட சூழ­லில் மக்­கள் தொகையை குறைத்து இருக்­கக்­கூ­டிய மாநி­லங்­கள் பாதிக்­கப்­பட கூடாது. இந்த இரண்டு வித­மான மாநி­லங்­க­ளுக்கு இடையே சீரான நிலை வரும் வரை, தொகுதி மறு­சீ­ர­மைப்பு நிறுத்தி வைக்­கப்­பட்ட வேண்­டும் என்ற கருத்து சொல்­லப்­பட்டு, நிறுத்தி வைக்­கப்­பட்டு இருக்­கி­றது. மக­ளிர் இட­ஒ­துக்­கீடு மசோதா நாடா­ளு­மன்­றத்­தில் கொண்டு வரப்­பட்ட போது, தொகுதி மறு­சீ­ர­மைப்­புக்­குப் பிறகு அந்த இட­ஒ­துக்­கீடு செயல்­பாட்­டிற்­குக் கொண்டு வரப்­ப­டும் என்று சொல்­லப்­பட்­டது. அது­போல், நாடா­ளு­மன்­ற­திலே பல கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளிக்­கும்­போது அமைச்­சர்­க­ளும் பல முறை மறு­சீ­ர­மைப்­பைப் பற்­றிக் குறிப்­பிட்­டுள்­ளார்­கள்.

இப்­ப­டிப்­பட்ட ஒரு சூழ­லில் தொகுதி மறு­சீ­ர­மைப்பு தமிழ்­நாட்டை பாதிக்­கக்­கூ­டாது என்­ப­தற்­காக முத­ல­மைச்­சர் அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்தை நடத்­து­கி­றார். மிக முக்­கி­ய­மான விஷ­யம் என்­ன­வென்­றால், தமிழ்­நாட்­டிற்கு எண்­ணிக்கை குறைக்­கப்­ப­டாது, நாடா­ளு­மன்­றத்­தில் உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்கை 39 என்­கிற அதே அள­வில் இருந்­தா­லும், மற்ற மாநி­லங்­க­ளில், உ.பி. முத­லான மாநி­லங்­க­ளில் மக்­கள் தொகை அடிப்­ப­டை­யில் அதி­க­மான எண்­ணிக்கை தரப்­பட்­டால், அது­வும் நமக்­குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும்.

தமிழ்­நாட்­டின் எம்­பிக்­க­ளு­டைய சத­வீ­தம் 543ல் 7.18 சத­வி­கி­தம் இருக்­கி­றோம். ஆனால் இப்­படி மாறும்­போது 5 - 5.7 சத­வி­கி­த­மாக மாற வாய்ப்­புள்­ளது. அதில் நாம் பெரிய அள­வில் பாதிக்­கப்­ப­டு­வோம். தென் மாநி­லங்­கள் அதிக அள­வில் பாதிக்­கப்­ப­டும்.இதைத்­தான் நம் முதல்­வர் மீண்­டும் மீண்­டும் சொல்­கி­றார்­கள். இதற்கு ஒரு தெளி­வான பதிலை உள்­துறை அமைச்­சரோ - ஒன்­றிய அரசோ கூற­வேண்­டும். இது நியா­ய­மான அச்­சம். இதில் தெளிவு பெற்­றால்­தான் இந்­தப் பிரச்­சி­னைக்கு முடிவு ஏற்­ப­டும்” என்று தெரிவித்தார்.

மேலும், ”தமிழ்­நாடு பாதிக்­கப்­ப­டா­மல், தென்­மா­நி­லங்­கள் பாதிக்­க­ப­டா­மல் தொகுதி மறு­சீ­ர­மைப்பு பற்றி சரி­செய்­வ­தற்கு பல்­வேறு கருத்­துக்­கள் சொல்­லப்­ப­டு­கி­றது. அதற்­கா­க­தான் முத­ல­மைச்­சர் அனைத்து கட்சி கூட்­டத்தை அழைத்து இருக்­கி­றார்­கள். அங்கே பல்­வேறு கருத்­துக்­கள் சொல்­லப்­ப­டும். எது சரி­யாக எல்­லா­ருக்­கும் ஏற்­றுக்­கொள்ள கூடிய ஒன்­றாக இருக்­கி­றதோ, அதை நிச்­ச­ய­மாக ஏற்­றுக்­கொள்­வார்­கள். முத­லில் விவா­தம் நடக்க வேண்­டும். அந்த விவாத்­திற்கே சிலர் வர தயங்­கு­கி­றார்­கள். பிஜே­பி­யும் அங்கு வந்து நியா­யமா வந்து அவர்­க­ளின் கருத்­துக்­களை சொல்­ல­லாம்.

அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தில் தமிழ்­நாட்­டின் ஒரு­மித்த குரலை எழுப்­ப­லாம். எல்­லா­ரு­டைய கருத்­தை­யும் கேட்டு, அதற்­கான சரி­யான தீர்­வைக் காண வேண்­டும் என்­பதே முத­ல­மைச்­ச­ரு­டைய எண்­ணம்; திமு­க­வி­னு­டைய நிலைப்­பாடு. தமிழ்­நாடு, தென்­மா­நி­லங்­கள், மக்­கள் தொகை­யைக் குறைத்து உள்ள தொகுதி மாநி­லங்­கள் மறு­சீ­ர­மைப்­பால் பாதிக்­கப்­ப­டக் கூடாது” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

From around the web