தமிழ்நாட்டில் ப்ளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது.. 94.03% மாணவர்கள் தேர்ச்சி.. மாணவிகள் அசத்தல்!

 
school

தமிழ்நாட்டில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத்திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 90 சிறைக் கைதிகள் என ஒட்டுமொத்தமாக 8.65 லட்சம் பேர் வரை பதிவு செய்திருந்தனர். அவர்களில் 8.17 லட்சம் மாணவர்கள் தேர்வில் கலந்துகொண்டனர். சுமார் 48,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்வில்லை.

இந்நிலையில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.

Anbil Mahesh

அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறைக்கு மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலுடன் ப்ளஸ் 2 ரிசல்ட் வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு மாணவர்களுக்காக இந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் தவறான வழியில் செல்லக்கூடாது என்பதற்காக ஆக்கப்பூர்வமான பல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறது என்றார்.

தமிழ்நாட்டில் ப்ளஸ் 2 தேர்வில் இந்த முறை 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ப்ளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மாணவிகள் 4,05,753 பேர் (96.38 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.4 சதவீதம் பேர் ( 3,49,697 பேர்) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 4.93 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றார்.

school

மாநிலத்தில் உள்ள 7,533 மேல்நிலைப் பள்ளிகளில், 2,767 மேல்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளன. இதில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை  326 ஆக உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற 12ம் வகுப்புத் தேர்வில் 8,06,277 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,55,997 பேர் தேர்ச்சிப் பெற்றனர். தேர்ச்சிப் பெற்றவர்களின் விகிதம் 93.76% ஆக இருந்தது.

From around the web