ஓரணியில் தமிழ்நாடு.. தமிழர்களை ஒருங்கிணைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

 
MKS

அதிமுக பொதுச் செயலாளர் எழுச்சிப் பயணம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் அறிவித்துள்ள நிலையில், ஜூலை 1ம் தேதி முதல் திமுகவினர் ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

வீடுவீடாகச் சென்று மக்களிடம் தமிழ்நாடு அரசு செய்து வரும் நல்ல திட்டங்கள் தொடர வேண்டுமா போன்ற கேள்விகளையும், தமிழர்களை ஒன்றிய அரசு எவ்வாறு வஞ்சிக்கிறது, இதிலிருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டாமா என்ற கேள்விகளையும் முன் வைத்து கேட்கிறார்கள். இதற்கு ஒப்புதல் அளிக்கும் மக்களை ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் உறுப்பினர்களாகச் சேர்க்கிறார்கள்.

வீட்டுச்ச் சுவரின் வெளிப்புறம் ஓரணியில் தமிழ்நாடு என்ற படமும் ஒட்டப்படுகிறது. பல வீடுகளில் கடவுள்களின் படத்தையும் அந்த படத்திற்கு மேலே காண முடிகிறது. 

2 கோடி மக்களை கட்சியில் இணைக்கும் திட்டத்தில் இந்த முயற்சியை துரிதப்படுத்தியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. என கட்சியின் முன்னணித் தலைவர்கள் அனைவரும் வீடுவீடாகச் சென்று புதிய உறுப்பினர்களை ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அன்றாட நிலவரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளிடம் தொலைபேசியில் பேசி தெரிந்து ஆலோசனை கூறி வருகிறார்.

From around the web