இன்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வு.. 133 மையங்களில் 41,485 பேர் தேர்வு எழுத வருகை!

 
TTRB

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வு இன்று நடைபெறுகிறது.

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 2,058 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில் கடந்த அக்டோபரில் அறிவிப்பு வெளியிட்டு டிசம்பரில் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. மேலும் கடந்த மாதம் 7-ம் தேதி தேர்வு நடக்க இருந்த நிலையில் புயல் காரணமாக தேர்வு இன்றைக்கு (பிப். 4) தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இன்று நடக்கும் கட்டாய தமிழ் தகுதி தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே பிரதான தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கட்டாய தமிழ் தகுதி தேர்வில் விலக்கு அளிக்க கோரியும் இந்த தேர்வு எழுத வகை செய்யும் அரசு ஊழியர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரியும் ஒளி சிறுபான்மையினர் சென்னனை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய குழு முன் விசாரணைக்கு வந்தது.

TRB

இதனையடுத்து தமிழ்நாடு அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் ஜெனரல் ஆர்.நீலகண்டன், அரசு பீலிடர் எட்வின் பிரபாகர் சிறப்பு பீலிடர் கதிரவன் ஆகியோர் ஆஜராகினர். மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் இளங்கோ ஆஜராகி, தமிழ் மொழி தெரியாதவர்கள் பணி நியமன தேதியில் இருந்து இரண்டு ஆண்டுக்குள் மொழி தேர்வில் தேர்ச்சி பெற சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. அதே சலுகையை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என வாதிட்டார்.

அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்திற்கு பிறகு வெவ்வேறு பணிகளுக்கான மூன்று தீர்வுகள் நடந்து முடிந்து விட்டது. பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த அக்டோபரில் அறிவிப்பு வெளியிட்டு டிசம்பரில் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு விட்டன. புயல் மழையால் ஜனவரி 7-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 4-ம் தேதிக்கு தேர்வு தள்ளி வைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது இவ்வாறு வாதிட்டார்.

TRB

இதனையடுத்து மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ஓர் ஆண்டுக்கு மேலாக சட்ட திருத்தம் அமலில் இருந்தும் தேர்வு அறிவிப்பு வெளியிட்ட பின்னும் நீதிமன்றத்தை நாடவில்லை எனவும், கடைசி நேரத்தில் மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீலிக்க இயலாது. இன்று 4,485 பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த நேரத்தில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிப்பது தேர்வு நடைமுறைக்கு இடையூறு செய்வதாகிவிடும்.

மனுதாரர்களின் கோரிக்கையை அரசுதான் பரிசீலக்க வேண்டும். மனுதாரர்கள் தேர்வு எழுதலாம். அரசு தரப்பில் மார்ச் 7-க்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

From around the web