இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

 
Ilayaraja

லண்டனில் மார்ச் 8ம் தேதி சிம்பொனி நிகழ்ச்சி நடத்த உள்ளதையொட்டி இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

”இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது 🎼🎼 ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.

அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.


 

From around the web