முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்! தமிழிசை பண்ணுன சேட்டைய கவனிச்சீங்களா?

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனைத்துக் கட்சித்தலைவர்களும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி, பாமக அன்புமணி, பாஜக அண்ணாமலை உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆளுநர் ஆர்.என்.ரவியும் முதலமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். தெலங்கானா, புதுச்சேரி முன்னாள் ஆளுநரும் தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தர்ராஜனும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருந்தார்.
ஆனால் அதில் மும்மொழிகளில் வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டு தமிழ், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழியில் பதிவிட்டு இருந்தார்? முதலமைச்சர் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதால் மும்மொழியில் வாழ்த்துகிறேன் என்று சொன்னாலும் ஏன் மூன்றாவது மொழியாக தெலுங்கில் பதிவிட்டார் என்பது முக்கியமான கேள்வியாகும். முதலமைச்சரை தெலுங்கர் என்று சொல்ல வருகிறாரா? ஒருவரை வாழ்த்த வேண்டும் என்றால் மனதார வாழ்த்த வேண்டும். வாழ்த்து சொல்வதில் கூட அநாகரிய அரசியல் பேசி, தமிழர்களிடம் தனக்குள்ள நன்மதிப்பைக் கெடுத்துக் கொண்டுள்ளார் தமிழிசை சவுந்தர்ராஜன்.
இதற்கு அவர் வருத்தம் தெரிவிப்பதே சரியானதாக இருக்கும்.
மும்மொழியில் வாழ்த்துகிறேன்...
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) February 28, 2025
“மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!”
“Wishing the Honourable Chief Minister Thiru M.K. Stalin a very happy birthday!”
“గౌరవనీయ ముఖ్యమంత్రి శ్రీ ము.క. స్టాలిన్ గారికి హృదయపూర్వక జన్మదిన… pic.twitter.com/4evSVI6ubC