அடுத்த 9 நாட்களுக்கு தாம்பரம் - திருச்சி அதிவிரைவு ரயில்!!

 
Train Train

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று சனிக்கிழமை ஜனவரி 4ம் தேதி முதல் தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. 

வண்டி எண் 06191 தாம்பரம் - திருச்சி அதிவிரைவு சிறப்பு ரெயில் ஜனவரி 4,5,10,11,12,13,17,18,19 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து பகல் 3.30 மணி. மணிக்கு புறப்பட்டு இரவு 11.35 மணிக்கு திருச்சி சென்றடையும்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 06190  திருச்சி - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரெயில் ஜனவரி  4,5,10,11,12,13,17,18,19 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். 

தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருத்துவத்தூர், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் இந்த சிறப்பு அதிவிரைவு ரயில். இருமார்க்கத்திலும் அடுத்த 9 நாட்களுக்கு இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

From around the web