10 மசோதாக்கள் மீது உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! ஆளுநருக்கு ஒரு மாதம் கெடு!!

 
RN Ravi

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்த மசோதாக்களை மீண்டும்  நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்டப்படி இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதைத் தவிர வேறு வழி இல்லை.ஆனால் வம்படியாக இந்த 10 மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். அது குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது.

ஆளுநரின் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தமிழ்நாடு அரசு. இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் மனு மீது தீர்ப்பு வழங்கப்பப்பட்டது. குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கையை ரத்து செய்த உச்சநீதிமன்றம், 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் படி பல்கலைக் கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்தராக பொறுப்பேற்க உ ள்ளார்.

மேலும் அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு  ஒரு மாத காலத்தில் ஒப்புதல் வழங்க வேண்டும். கூடுதல் சட்ட ஆலோசனை தேவைப்படும் பட்சத்தில்அதிக பட்சமாக 3 மாதம் அவகாசம் வழங்கியுள்ளது. ஆளுநர் திருப்பி அனுப்பும் மசோதாக்களை மீண்டும் அரசு நிறைவேற்றி அனுப்பும் போது அதை ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இந்தத் தீர்ப்பு இந்தியாவில் உள்ள அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும் என்பது முக்கியமானதாகும். அனைத்து இந்திய மாநிலங்களுக்காகவும் தமிழ்நாடு அரசு உரிமையை சட்டப்படி பெற்றுத் தந்துள்ளது.

From around the web