ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்றத் தீர்ப்பு.. நடிகர் விஜய் வரவேற்பு!!

ஆளுநர் மீதான தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று வரலாற்று மிக்கத் தீர்ப்பு அளித்தது. ஆளுநர்களின் அதிகாரம் என்ன என்பதை குறிப்பிட்ட நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வரையறுத்துள்ளது நீதிமன்றம். இந்தத் தீர்ப்பு தமிழ்நாடு மட்டுமல்லாமல் அனைத்து இந்திய மாநில ஆளுநர்களுக்குப் பொருந்தும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முதல் ஆளாக வரவேற்பு தெரிவித்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். சற்று நின்று நிதானித்து வரவேற்பு தெரிவித்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்.
”ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரவேற்பு ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது மாநிலத் தன்னாட்சிக்காகக் குரல் கொடுப்பதும் மாநில உரிமைகள் காப்பதும் தவெகவின் சமரசமற்ற கொள்கை நிலைப்பாடு” என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.