சூப்பர்.. இனி தமிழ் கட்டாயம்... தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு..!

 
School

தனியார் பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாய பாடமாக்க உத்தரவிட்டு தனியார் பள்ளிகளின் இயக்குனர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாய பயிற்று மொழியாக உள்ளது. அதே சமயம் சில தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் மொழி பயிற்று மொழியாக இல்லை என புகார்கள் எழுந்தன. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கூறினர்.

இதன் விளைவாக தமிழ்நாடு பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்ற சட்டம் அமலில் உள்ளது. அதன்படி கடந்த 2015-16ம் ஆண்டில் இருந்து அனைத்து வகையான பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ் கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022-2023ம் கல்வியாண்டில் 8ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயமாக அமலாகி உள்ளது.

Tamil

இந்நிலையில் தான் வரும் கல்வியாண்டான 2023-2024ல் 9ம் வகுப்பு வரையும், 2024-2025ல் 10ம் வகுப்பு வரையும் தமிழ் கட்டாயமாகிறது. இந்நிலையில் தான் தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் (சிஇஓ) தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் துறை இயக்குனர் நாகராஜ முருகன் சுற்றிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், “மாநில பாடத்திட்ட பள்ளிகள் மட்டுமின்றி தமிழகத்தில் இயங்கும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் 2024-25ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக கற்பிக்க வேண்டும். மேலும் மாணவர்கள் பொதுத்தேர்விலும் தமிழை ஒரு தேர்வாக கட்டாயம் எழுத வேண்டும். இதற்கான தேர்வுமுறை மற்றும் பாடத்திட்டங்கள் விரைவில் உருவாக்கப்படும்.

school

எனவே அனைத்து தனியார் பள்ளிகளும் இதற்கு தயாராக வேண்டும். தமிழ் கற்றுக்கொடுக்க தகுதியான ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். தமிழ் கட்டாய பாடமுறை குறித்த அறிவிப்பை தனியார் பள்ளிகள் கடைப்பிடிப்பதை மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web