திடீரென குறைந்த காய்கறி விலை.. வெங்காயத்தின் விலை உயர்ந்தது
சென்னை கோயம்பேடு சந்தையில் சின்ன வெங்காயம், தக்காளி விலையானது சற்று அதிகரித்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் ஒட்டன்சத்திரம், தேனி, திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் காய்கறி வரவழைக்கப்பட்டாலும் பெருமளவு காய்கறி வரத்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தே வருகின்றது. இந்த நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தைக்கு கடந்த சில நாட்களாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விற்பனை விலையும் சற்று அதிகரித்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 28 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கேரட் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தேங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி 25 ரூபாய்க்குக்கும், புடலங்காய் ஒரு கிலோ 29 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.