தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!
உலகளாவிய தங்க விலை உயர்வு இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரூபாய் டாலருக்கு எதிராக பலவீனமடைந்து வருவதும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கலாம். இந்தியாவில் திருமணங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் தங்கத்தின் தேவை அதிகரிப்பதால், விலையும் உயரக்கூடும்.
தங்க விலை வரும் நாட்களில் மேலும் உயரக்கூடும் என்று சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். உக்ரேனில் போர் மற்றும் உலகளாவிய பணவீக்கம் ஆகியவை தங்கத்தின் மீதான தேவை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கும். இருப்பினும், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான முடிவுகள் தங்க விலையை கீழே இழுக்கக்கூடும்.
அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 10 ரூபாய் உயர்ந்து, ரூ.6,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ரூ.54,000-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,521-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 8 ரூபாய் உயர்ந்து, ரூ.5,529-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 87,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, ரூ.87,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.87.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.