தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. சவரனுக்கு 120 ரூபாய் குறைந்தது.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

 
Gold-Price

மக்களுக்கு தங்கத்தின் மீதான ஆர்வம் ஒரு போதும் குறைந்தது இல்லை. கொரோனா காலத்தில் பலர் தங்களது வேலைகளை இழந்திருந்த நிலையிலும் பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்தனர். ஆனால் அந்த சூழ்நிலையில் தங்கத்தின் விலை மிகவும் அதிகமாக காணப்பட்டது.

தங்க நகைகளில் முதலீடு செய்வது பிற்கால வாழ்க்கைக்கு பெரிய அளவில் உதவும், பெண் பிள்ளைகளுக்கு பிற்காலத்தில் பலனாக இருக்கும் என்பதால் மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். தங்கம் குறைந்தால் மகிழ்வதும், அதிகரித்தால் கவலைப் படுவதும் நம்மவர்களின் இயல்பாக உள்ளது. இந்த நிலையில் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.

Gold-Price

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு எந்த மாற்றமுமின்றி விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 15 ரூபாய் குறைந்து, ரூ.7,355-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, ரூ.58,840-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.6,075-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து, ரூ.6,055-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 1,06,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,000 ரூபாய் குறைந்து, ரூ.1,05,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.105.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web