அரசு பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான பயணம்... படிக்கட்டு பயணத்திற்கு ஆப்பு... போக்குவரத்து துறை அதிரடி!!

 
bus

அரசு பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் மீது பேருந்து ஓட்டுநர்களும், நடத்துநர்களும் புகார் அளிக்கலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்து படித்து வருகின்றனர். பெரும்பாலும் மாணவர்கள் படியில் நிண்றபடி பயணம் செய்து வருவதுடன், பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர். இதனால் பல பிரச்சனைகளை பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் சந்தித்து வருகின்றனர்.

bus

அரசு பேருந்துகளில் இளைஞர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வதால் விபத்துக்கள் ஏற்படுகிறது என பரவலாக கருத்துக்கள் நிலவுகிறது. இந்நிலையில் பேருந்தில் பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், அவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கான நிலையான இயக்க நெறிமுறைகள் குறித்தும் ஓட்டுநர், நடத்துநர்களுக்குச் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்கிறது. மாணவர்கள் இவ்வாறு உயிருக்குப் பாதுகாப்பற்ற முறையில் பயணிக்க முற்பட்டால் பேருந்தைச் சாலையோரம் நிறுத்தி, முறையற்ற பயணத்தைத் தவிர்க்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

bus

மேலும் ஓட்டுநர்கள், நடத்துநர்களின் அறிவுரையை மாணவர்கள் கேட்காமல் செயல்பட்டால், காவல் நிலையம் அல்லது மாநகர போக்குவரத்துக் கழகத்திற்குத் தகவல் தெரிவித்து அவர்கள் புகார் அளிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது ஓட்டுநர், நடத்துநர்களின் பொறுப்பு என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web