நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் அடித்து சித்திரவதை.. நெல்லையில் அதிர்ச்சி!

 
Nellai

நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்பு சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கபட்டதை தொடர்ந்து நீட் தேர்வு தேர்ச்சி பெறுவதற்காக 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் நீட் பயிற்சி மையங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் உருவாக்கி உள்ளது.

இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன் என்பவர் பிரபல பயிற்சி மையத்தின் பயிற்சியாளராக பணியாற்றிய நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக திருநெல்வேலியை தலைமை இடமாகக் கொண்டு ஜல் நீட் அகெடாமி என்ற பயிற்சி மையத்தை உருவாக்கி உள்ளார். இந்த பயிற்சி மையத்தில் கடந்த ஆண்டு 12 பேர் அரசு மருத்துவக் கல்லூரி இடம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

beaten

இந்த பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலை நடந்த தேர்வு முடிந்து மற்றொரு ஒரு ஆசிரியர் வருவதற்கு முன்பு இடைப்பட்ட நேரத்தில் வகுப்பறையில் தூங்கியதாக கூறப்படுகிறது. இதனை வகுப்பறையில் உள்ள சிசிடிவி கேமிரா மூலம் கண்டு ஆத்திரமடைந்த பயிற்சி மையத்தில் உரிமையாளரும் பயிற்சியாளருமான ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன் மாணவர்களை பிறம்பால் சரமாரியாக தாக்கி உள்ளார்.

இதனால் மாணவர்களுக்கு உடலில் கை கால் முதுகு பின்புறம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள இந்த பயிற்சி மையம் இரண்டாம் தளத்தில் அமைந்திருப்பதால் இந்த பயிற்சி மையத்திற்கு வரக்கூடிய மாணவர்கள் பயிற்சி மைய வாசலிலே காலனியை விட்டு விட்டு வர வேண்டும். 

அதற்கென பெண்களுக்கு தனி பகுதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் காலனியை முறையாக அடுக்கவில்லை என்பதற்காக கையில் காலணி எடுத்து வந்து வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவர்களை பார்த்து இந்த காலனி யாருடையது என ஆசிரியர் கேட்டு என்னுடையது என ஒரு மாணவி எழுந்து வந்தவுடன் அந்த மாணவி மீது தூக்கி வீசுவது போன்று அந்த காலனி சக மாணவிகள் மீது விழுவது போன்ற நிகழ்வும் அரங்கேறி உள்ளது.


மேலும் மாணவர்களை தாக்குதல் அவதூறாக பேசுதல் காலணி கொண்டு தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியதால் இந்த சம்பவம் தொடர்பாக பெயர் சொல்ல விரும்பாத நபர் ஒருவர் மாணவர்களை தாக்குவது போன்ற சிசிடிவி வீடியோ காட்சிகள் மற்றும் காலனியை மனைவி மீது வீசுவது போன்ற வீடியோ ஆதாரத்துடன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

புகார் பேரில் காவல்துறை சிஎஸ்ஆர் பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பயிற்சி மைய உரிமையாளர், பயிற்சியாளர் மற்றும் அங்கு பணியாற்றிய மற்ற ஊழியர்கள் இது மட்டுமல்லாமல் மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web