மாணவர்களே.. இன்னுக்கு பள்ளி லீவு கிடையாது... முழு வேலை நாள்!!

 
school

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை கிடையாது என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

பெருமழையின் காரணமாக சென்னை மாவட்டம் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வந்த அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால், மாணவர்களின் கற்றல் செயல்பாடு பாதிக்கப்பட்டிருந்தது. எனவே, அதனை ஈடு செய்யும் வகையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

school

அந்த வகையில் 4.2.2023 (சனிக்கிழமை) இன்று அனைத்து வகை பள்ளிகளும் புதன்கிழமை பாடவேளையை பின்பற்றி முழு வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அறிவிப்பை அனுப்பியுள்ளார். 

எனவே, சென்னையில் உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் புதன்கிழமை பாடவேளைக்கான தயாரிப்போடு பள்ளிகளுக்கு வர வேண்டும்.

school

தற்போது வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

From around the web