தன்னைத்தானே பிளேடால் அறுத்துக்கொண்ட நாடகமாடிய மாணவி.. சென்னையில் பகீர் சம்பவம்!

சென்னையில் காதலன் பேசாமல் இருந்ததால், மாணவியே தன்னைத் தானே அறுத்துக்கொண்டு, நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில், கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி பி.டெக். படித்து வருகிறார். இவர், கல்லூரி அருகே நின்று கொண்டிருந்த போது, முகமூடி அணிந்த மர்ம நபர்கள் பிளேடால் கிழித்ததாக அலறியுள்ளார். அருகில் இருந்தவர்கள் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், மாணவியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது மாணவி இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததும், அவர் கடந்த சில நாட்களாக பேசாமல் இருந்ததால், அவரை பேச வைப்பதற்காக தன்னைத்தானே பிளேடால் கிழித்துக்கொண்டு நாடகமாடியதும் அம்பலமானது.