கல்லூரி விடுதி கழிவறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி

 
Dindigul

செம்பட்டி அருகே உள்ள தனியார் தோட்டக்கலை கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே தனியார் தோட்டக்கலை கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்கின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி பகுதியைச் சேர்ந்த பால்கனி என்பவரின் மகள் கலை நித்யா (21), பி.எஸ்.சி., தோட்டக்கலை பிரிவில் முதலாமாண்டு படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு சென்ற மாணவி, கல்லூரி விடுதிக்கு திரும்பியுள்ளார். அவரது அறையில் 3 மாணவிகள் தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை 7 மணி வரை சக மாணவியுடன் கலை நித்யா பேசி வந்துள்ளார். பின்னர் கல்லூரி விடுதி கழிவறைக்கு சென்றார்.

suicide

நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால், சந்தேகம் அடைந்த சக மாணவிகள், விடுதி காப்பாளரிடம் தெரிவித்தனர். இதையடுத்து விடுதி பெண் கண்காணிப்பாளர் செம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி முருகேசன், செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

பின்னர், விடுதி கழிவறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ​​அங்கு கலை நித்யா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டனர். இதையடுத்து, சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sempatti PS

இதுகுறித்து மாணவிகள் சிலர் கூறியதாவது, சில நாட்களாக கலை நித்யா மன உளைச்சலில் இருந்ததால் தாயார் பர்வத தேவி கடந்த வாரத்தில் 3 நாட்கள் தங்கியிருந்தார். அவருடன் சொந்த ஊருக்கு சென்ற கலை நித்யா பிப்., 20-ம் தேதி கல்லுாரி திரும்பினார். நேற்று காலை கழிப்பறைக்கு சென்றவர் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. தோழியர் கதவை உடைத்து பார்த்தபோது ஜன்னலில் துாக்கிட்டப்படி  இறந்து கிடந்தார் என்றனர்.

From around the web