கடமை தவறினால் கடும் நடவடிக்கை... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!!

 
CM Stalin

போதைப் பொருள், கள்ளச்சாராயம், பெண்கள் பாதுகாப்பு, லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் கடமை தவறுபவர்கள் மீது தமிழ்நாடு அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

திருபுவனம் லாக்கப் மரணம் குறித்து அறிந்த முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் கடும் கோபத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறிதுது உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டத்தை உடனடியாக கூட்டியுள்ளார்.

”குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்! மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் ஆட்சியாகத்தான் திராவிட மாடல்அரசு திகழ்ந்து வருகிறது. "போதைப் பொருள் - கள்ளச்சாராயம் - பெண்கள் பாதுகாப்பு - லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்” என்பதைச் சட்டம் - ஒழுங்கு குறித்த இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மிக மிக கடுமையாக இருக்கும் என்று முதலமைச்சர் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது

null



 

From around the web