மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சருக்கு அலைக்கழிப்பு.. காலில் காயம் பட்ட தனது தாயை தூக்கிச் சென்ற மகள்.. வைரல் வீடியோ

 
Erode

ஈரோடு அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் கொடுக்காததால் மூதாட்டியை அவரது மகள் தன்னந்தனியாக தூக்கி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம் பெரியவலசு பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி சொர்ணா (80). இவ    ர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதியதில் காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை மீட்ட அவரது மகள் வளர்மதி, ஆட்டோ மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். 

Erode

அவர்களைக் கண்ட மருத்துவர்கள் மூதாட்டியை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். மூதாட்டியை சம்பந்தப்பட்ட பிரிவுக்கு அழைத்து செல்ல ஸ்ட்ரெச்சர் அல்லது சக்கர நாற்காலியை கேட்டபோது, மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் பதில் ஒன்றும் கூறாமல் அலைகழித்ததாக கூறப்படுகிறது.


இதையடுத்து, வலியால் துடித்து கொண்டிருந்த மூதாட்டியை, மகள் வளர்மதி தன்னந்தனியாக விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு தூக்கிச் சென்றார். மூதாட்டியை பெண் தூக்கி சென்றதை மருத்துவமனை வளாகத்தில் இருந்த அனைவரும் பார்த்தனர். ஆனால் யாரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web