தொடரும் தெருநாய்கள் வெறியாட்டம்! சிறுவன் பலி!!
Feb 10, 2025, 08:02 IST

இந்தியா முழுவதும் தெரு நாய்களின் வெறியாட்டத்தால் உயிர்ப்பலிகள் தொடர்ந்து வரும் நிலையில், இதைத் தடுப்பதற்காக மாநில அரசுகளோ, ஒன்றிய அரசோ அல்லது நீதிமன்றங்களோ உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தத்திற்குரியதாகும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே தெருநாய் கடித்ததில் 9 வயது சிறுவன் நந்திஷ் உயிரிழந்துள்ளான். 5 நாட்களுக்கு முன்னர் பள்ளிக்குச் சென்றபோது தெரு நாய் கடித்துள்ளது. இதை வீட்டிற்கு யாரும் தெரிவிக்கவில்லயாம். திடிரென சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏறட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது தான் தனக்கு நாய் கடித்த விவரத்தை சிறுவன் கூறியுள்ளான். உயர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அம்புலன்ஸிலேயே சிறுவனின் உயிர் பிரிந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.