எம்.எல்.ஏ வையும் விட்டு வைக்காத ஃபெஞ்சல் புயல்!
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் பெய்துள்ள கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இணைப்புப் பாலங்கள் உடைபட்டு கிராமங்கள் தனித்தீவுகளாக காட்சியளிக்கின்றன. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் களத்தில் இருந்து நிவாரணப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
இந்நிலையில் மயிலம் சட்டமன்றத் தொகுதி பாமக எம்.எல்.ஏ சிவகுமார், குடும்பத்தினருடன் வெள்ளத்தில் சிக்கியுள்ளார். இரண்டுநாட்களுக்குப் பிறகு ரப்பர் படகு மூலம் மீட்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுடன் இணைந்து வெள்ளப்பகுதிகளை பார்வையிடச் சென்றுள்ளார் சிவகுமார்.
பாமக எம்.எல்.ஏ மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட தகவல் அந்தப் பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இயற்கையின் சீற்றத்திற்கு எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் என்ற பாகுபாடு தெரியாது தானே!