வயிற்றெரிச்சல்காரர்கள் ! ஒன்றிய அரசு மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

 
CM Stalin

பல்கலைக்கழக மானியக்குழு வின் புதிய திருத்தப்பட்ட விதிகளை திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டுவந்து அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தத் தனித்தீர்மானத்தில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தனர் பாஜக எம்.எல்.ஏ.க்கள்.

தனித்தீர்மானத்தை தாக்கல் செய்து முதலமைச்சர் பேசும் போது,

கல்லூரிகள் இயங்குவது மாநில அரசின் இடத்தில்; பேராசிரியர்களுக்கு ஊதியம் தருவது மாநில அரசு; உதவித்தொகை – ஊக்கத்தொகை - கல்விக் கட்டணச் சலுகை என மாணவர்களுக்கு அனைத்துச் செலவுகளையும் செய்வது நாங்கள்! இவ்வளவையும் நாங்கள் செய்ய, எம் பல்கலைக்கழங்களுக்கு வேந்தராக இருந்து நிர்வகிப்பதோ எங்கிருந்தோ வந்த ஆளுநர்!

இதையெல்லாம் மிஞ்சும் கொடுமையாக, துணைவேந்தரையும் ஒன்றிய அரசால் அனுப்பப்பட்ட ஆளுநரே நியமிக்கலாம் என்று #UGC தன் விதிகளைத் திருத்துமானால் என்னவாகும் உயர்கல்வியின் நிலை? தமிழ்நாடு உயர்கல்வியில் முதலிடத்தில் இருப்பதைக் காணப் பொறுக்காத வயிற்றெரிச்சலில் நம்மைக் கீழே தள்ளும் அப்பட்டமான முயற்சிதான் #UGC_Draft_Regulations!

இதனை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தமிழர்களின் ஒன்றுபட்ட குரலுக்கு ஒன்றிய அரசு செவிசாய்க்காவிட்டால், மக்கள் மன்றத்தையும் நீதிமன்றத்தையும் நாடுவோம்! வெல்வோம் என்று கூறியுள்ளார்.


 


 

From around the web