ஆன்லைன் பதிவுகள் தொடக்கம்! ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் மதுரை!!
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம்,பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் ஜனவரி 14, 16, 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது. காளைகள் ஏதாவது மேற்கண்ட ஒரு ஊரில் மட்டுமே போட்டியில் பங்கேற்கலாம். காளை உரிமையாளருடன் காளையுடன் பழக்கமான ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் madurai.nic.in என்ற இணையதள முகவரி மூலமாக தங்களது பெயர்களை இன்று திங்கட்கிழமை மாலை 5 மணி முதல் நாளை செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களின் சான்றுகள் முழுவதும் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்கள் மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா இது தொடர்பான செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இந்த போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது