நேருவை அவதூறு செய்த ஸ்டாண்ட் அப் காமெடியன்! மன்னிப்பு நாடகமா?
நேருவை மிகவும் அருவருக்கத் தக்க வகையில் பேசி மகாத்மா காந்தியையும் நாட்டின் சுதந்திரத்தையும் கேலியாகச் சித்தரித்த ஸ்டாண்ட் அப் காமெடியன் பரத் பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அறிக்கை வெளியிட்டு இருந்தார். தமிழ்நாடு காவல் துறை பரத் பாலாஜியை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இருந்தார்.
சமூகத் தளங்களிலும் பரத் பாலாஜியின் வீடியோவை பகிர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். தனக்கு எதிரான கண்டனங்களைத் தெரிந்து கொண்ட பரத் பாலாஜி மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தான் வெளியிட்ட வீடியோ பலரது மனதை புண்படுத்தியதற்காக வருந்துகிறேன். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வீடியோவையும் நீக்கி விட்டேன். பண்டிட் ஜவஹர்லால் நேரு மீது பெரும் மதிப்பு வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
போலீசாரின் கைதுக்கு பயந்து மன்னிப்பு கேட்டுள்ளாரா? மன்னிப்பு கேட்டதால் போலீசார் கைது செய்ய மாட்டார்களா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.