தனித்துப் போட்டி? பிரேமலதா விஜயகாந்த் அதிரடி முடிவு!!

மாநிலங்களவை உறுப்பினர் தராத நிலையில் அதிமுக மீது அதிருப்தியுடன் உள்ளார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். ஜனவரி மாதத்தில் கட்சியின் மாநாட்டு முடிந்த பிறகு தான் கூட்டணி பற்றி முடிவெடுப்போம் என்று கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி மாநிலங்களவை உறுப்பினர் தருவதாகத் தான் கூட்டணி ஒப்பந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார். ஆண்டு குறிப்பிடச் சொன்ன போது அது வழக்கமில்லை என்று சொல்லிவிட்டார்கள். அரசியல் நாகரீகம் கருதி தான் அந்தக் கடிதத்தை வெளியிடாமல் உள்ளோம். கேப்டன் விஜயகாந்த் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டவர். மீண்டும் ஒரு சூழல் வந்தால் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடத் தயங்கமாட்டோம்.
திமுகவுடன் கூட்டணியா என்பதை காலம் தான் பதில் சொல்லும். கூட்டணி பற்றிய முடிவை கட்சியின் மாநாடு முடிந்த பிறகே எடுக்க உள்ளோம். இப்போது கூட்டணி பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தனித்துப் போட்டியிடுவதன் மூலம் கட்சியின் செல்வாக்கை நிருபிக்க முடியும், திமுகவுடன் கூட்டணி சேராமலேயே அந்த அணியின் வெற்றிக்கு உதவியாக இருக்க முடியும் என்பதால் பிரேமலதா விஜயகாந்தின் தனித்துப் போட்டி என்று பேச்சு அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.