வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்.. 43 இடங்களில் திமுக கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்!!

 
SIR SIR

எதேச்சாதிகாரப் போக்கில் இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ளதை கண்டித்தும் ‘மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் உள்பட 43 இடங்களில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சென்னையை பொறுத்தவரை 4 இடங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, கவிஞர் காசிமுத்து மாணிக்கம், திராவிடர் கழக துணை தவைவர் கலிபூங்குன்றன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்பிக்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன், டாக்டர் கனிமொழி, எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, காரப்பாக்கம் கணபதி, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார், காங்கிரஸ் துணை தலைவர் சொர்ணா சேதுராமன், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முத்தழகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர், மனிதநேய மக்கள் கட்சி அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஏ.ஷேக் முகமது அலி, திண்டுக்கல் ஐ.லியோனி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் எஸ்ஐஆர்க்கு எதிராக பதாகைகளை கையில் பிடித்தப்படி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

From around the web