தென் தமிழ்நாட்டின் முதல் டைடல் பூங்கா! முதலமைச்சர் பெருமிதம்!!
தூத்துக்குடியில் 32 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய மினி டைடல் பார்க் ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், டி.ஆர்.பி.ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தென் தமிழ்நாட்டின் முதல் டைடல் பூங்கா புதிய அத்தியாயத்தையும் வாய்ப்புகளையும் இளைஞர்களுக்கு உருவாக்கித் தந்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். இந்த டைடல் பூங்காவில் Protogrowth Inc மற்றும் Pro1 Health Systems ஆகிய நிறுவனங்களுக்கான இட ஒதுக்கீட்டு ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாட்டில் சென்னை போல் தூத்துக்குடி மட்டுமே தரைவழி, இருப்புப்பாதை, வான்வழி, கடல்வழி போக்குவரத்து கொண்டுள்ள நகரமாகும். தூத்துக்குடிக்கு கூடுதல் ரயில் சேவைக்காக பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் கனிமொழி எம்பி, விமான நிலைய விரிவாக்கத்திற்காகவும் பெரும் முயற்சி எடுத்து வருகிறார். டைடல் பூங்கா திறப்பை யொட்டி தூத்துக்குடிக்கு கூடுதல் விமான சேவைகளை இயக்க நிறுவனங்கள் முன் வரும் என்றும் எதிர்பார்க்கலாம்.