சோனியா காந்தி கருத்து! குடியரசு மாளிகை விளக்கம்!!

இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய குடியரசுத் தலைவர் முர்மு உரையாற்றினார். உரையின் இறுதிப் பகுதியை வாசிக்கும் போது குடியரசுத் தலைவர் சோர்வாகக் காணப்பட்டார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கருத்துத் தெரிவித்து இருந்தார். ராகுல் காந்தியும் இதை வழி மொழிந்திருந்தார். இந்நிலையில் இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உரையின் போது குடியரசுத் தலைவர் சோர்வு அடையவில்லை. காயப்படுத்தும் வகையில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர்சோர்வு அடைந்துவிட்டார், அவரால் பேசமுடியவில்லை என்று கூறி இருந்தனர். குடியரசுத் தலைவர் எந்த நிலையிலும் சோர்வு அடையவில்லை. விளிம்புநிலை மக்கள், விவசாயிகள், பெண்கள் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் பேசிய உரை சோர்வை தராது என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.