மதுபோதையில் தாயை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற மகன்.. ராணிப்பேட்டை அருகே கொடூரம்!!

 
Rape

ஆற்காடு அருகே வீட்டில் தனியாக இருந்த தாயை மதுபோதையில் பாலியல் வன்கொடுமை செய்து மகனே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்து உள்ள சக்கரமல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் காவலர் தினேஷ் (32). இவருக்கு பிரியங்கா என்பவருடன் திருமணமாகி ஒரு ஆண், 2 பெண் குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழும் நிலையில், கடந்த ஆண்டு நன்னடத்தை இல்லாத காரணத்தினால் காவல்துறையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இதனால் சொந்த ஊரில் வசித்து வந்தபோது மது அருந்திவிட்டு தனது தாயிடம் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். தாய் கடந்த இரு தினங்களாக செல்போன் பேசாததால் சந்தேகமடைந்த மகள் பிரியா, வீட்டிற்கு சென்று பார்த்த போது தாய் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

Dead Body

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆற்காடு கிராம போலீசார், உயிரிழந்த வாணிஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வீட்டில் தனியாக இருந்த முன்னாள் காவலரான தினேஷை கைது செய்து விசாரணைக்காக ஆற்காடு கிராமிய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், தனது தாயை மது போதையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை தினேஷ் ஒப்புக்கொண்டுள்ளார்.

Arcot Taluk PS

தினேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மது போதையில் தாய் என்றும் பாராமல் போதையின் உச்சத்தில் பாலியல் வன்கொடுமை செய்து மகனே கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web