பீர் பாட்டிலை உடைத்து பெற்ற தாயை சரமாரியாக குத்திய மகன் கைது.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!!

 
MKB Nagar

வியாசர்பாடியில் குடிபோதையில் பீர் பாட்டிலை உடைத்து தாயை மகன் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் 11வது தெருவை சேர்ந்தவர் அப்புனு. இவரது மனைவி கண்ண்கி. இந்த தம்பதியினருக்கு அஜய் என்ற லூசு அஜய் (22) மகன் உள்ளார். இவர் ரயில்வே ஒப்பந்த பணிகளில் கூலி வேலை செய்து வருகிறார். மது பழக்கத்திற்கு அடிமையாகிய அஜய் தினமும் குடிப்பதற்கு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.

Bottle

இந்த நிலையில் அப்புனு வேலைக்கு சென்று இருந்த நிலையில் அஜய் மதுபோதையில் தனது தாயிடம் தகராறில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று பீர் பாட்டிலை உடைத்து தனது தாயின் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமரியாக குத்தியுள்ளார்.

அஜய் தாயின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் எம்.கே.பி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கண்ணகியை மீட்டு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

arrest

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த எம்.கே.பி நகர் போலீசார் தப்பி ஓடிய அஜய் என்கின்ற லூசு அஜயை இன்று காலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web