முதல்வருக்கு வழங்கப்பட்டது வெள்ளி செங்கோல் நினைவு பரிசு!

 
DMK

திமுக இளைஞரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெற்றது. இளைஞர் அணி தொடங்கப்பட்ட பிறகு முதல் மாநாடு கடந்த 2007-ம் ஆண்டு நெல்லையில் நடந்தது. தற்போது 2-வது மாநாடு சேலத்தில் நடக்கிறது. இந்த மாநாட்டுக்காக சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்தநாயக்கன்பாளையம் அருகில் சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

Kani

இன்று காலை 9.15 மணி அளவில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கட்சிக்கொடி ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டில், 25 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 22 தலைப்புகளில் சொற்பொழிவரங்கம் நடைபெற்றது.

இதற்கிடையில், இன்று மாலை 4.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைஞர் அணி மாநாட்டிற்கு வருகை தந்தார். அதன்போது கலைஞர், பெரியார், அண்ணா ஆகியோரின் உருவப்படத்திற்கு முதல்வர் மரியாதை செலுத்தினார். பிறகு இளைஞரணி மாநாடு மேடையில் திமுக இளைஞரணி மாநாட்டு மலரை முதல்வர் வெளியிட்டார்.

DMK

இதைத்தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிக்கு நினைவுப் பரிசாக வீர வாள், கேடயத்தை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். மேலும், மாநாட்டில் முதல்வருக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது.

From around the web