சேலம் அருகே கார் ஏற்றி வெள்ளி வியாபாரி கொலை... பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

 
Salem

சேலம் அருகே சாலையில் நடந்து சென்ற சங்கர் மீது கார் மோதும் பதை பதைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (47). இவரது மனைவி சொர்ணலதா (40). வெள்ளி வியாபாரியான இவர், வெள்ளி கட்டிகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 2-ம் தேதி காலையில் பால் வாங்குவதற்காக கடைக்கு சென்று திரும்பி வந்தார்.

Accident

அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கார், சங்கர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அந்த வழியாக நடந்து சென்றவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் சங்கர் மீது மோதிய கார் குறித்த விவரத்தை போலீசார் சேகரித்தனர். ஏற்கனவே சங்கரின் முதல் மனைவி இறந்துவிட்டதாகவும், அதன்பிறகு அவர் சொர்ணலதா என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குடும்ப பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, சாலையில் நடந்து சென்ற சங்கர் மீது கார் மோதும் பதை பதைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

From around the web