100 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து.. மணமகனின் நண்பர்கள் செய்த செயலால் அதிர்ச்சியடைந்த மணப்பெண்!

 
sirkali

சீர்காழி அருகே திருமணம் முடிந்த கையோடு மணப்பெண்ணிடம் மணமகனின் நண்பர்கள் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய நிகழ்வு அறங்கேறியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதி மாரிமுத்து நகரை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகன் முத்துக்குமார். இவர், இன்ஜினியரிங் படித்து முடித்து தற்போது மயிலாடுதுறையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுக்கா ஆபத்தாரணபுரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் - தமிழ்செல்வி என்பவர்களது மகள் இளங்கலை அறிவியல் பட்டதாரியான பவித்ரா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் தென்பாதிகள் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற்று முடிந்தது.

திருமணத்திற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் மணமக்களை வாழ்த்தி சென்ற நிலையில், மணமகனின் நண்பர்கள் ஒன்று சேர்ந்து 100 ரூபாய் பத்திரத்தில் மணப்பெணிடம் ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளனர். அந்த ஒப்பந்த பத்திரத்தில், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுக்கா வடலூர் ஆபத்தாரணபுரம் வ.உ.சி நகரில் வசித்து வரும் பவித்ரா ஆகிய நான் என் திருமணத்திற்கு பிறகு எனது கணவரை நைட் ஷோ சினிமாவிற்கு அனுப்புவேன் மேலும் செலவிற்கு காசு கொடுத்து விடுவேன். அவர் நண்பர்களுடன் கோவா, பாண்டிச்சேரி, தாய்லாந்து போன்ற டிரீப்க்கு அனுப்புவேன். என் கணவர் அவர்களது நண்பர்களுடன் இருக்கும் சமயத்தில் மைனா பட வில்லி பாணியில் எப்போ வருவீங்க? எப்போ வருவீங்க? என்று கேட்கமாட்டேன்.

Sirkali

மேலும் அவர் தூங்கும் போது பாயாகவும், ஏங்கும் போது தாயாகவும் இருப்பேன் என்று எனது கணவர் முத்துக்குமாருக்கு உறுதியளிக்கிறேன். இப்படிக்கு பவித்ரா என எழுதி கையெழுத்து வாங்கி கொண்டனர். இதற்கு மணப்பெண்ணுக்கு முழு சம்மதம் தெரிவித்து கையெழுத்து இட்டுள்ளார்.

மைனா படத்தில் வரும் காட்சிகளைப் போல வெளியில் செல்லும் கணவனை நிம்மதியாக இருக்க விடாமல் எப்ப வருவீங்க? எப்ப வருவீங்க? என டார்ச்சர் அனுபவிக்க கூடாது என்பதற்காக நண்பர்கள் எடுத்த புதுவிதமான யுத்தி திருமணத்திற்கு வந்திருந்த மற்ற திருமணம் ஆன ஆண்களை நம்மை இப்படி யாரும் காக்க வில்லையே என ஆதங்கத்துடன் நகைச்சுவையாக கூறி சென்றனர். மேலும் பலர் பத்திரம் கையெழுத்து முறையை கண்டு வியந்தனர். 

Sirkali

மேலும் இதுகுறித்து மணமகளிடம் பத்திரத்தில் கையெழுத்து பெற்ற மணமகனின் நண்பர்கள் கூறுகையில், “இது நாங்கள் விளையாட்டிற்காக செய்யவில்லை. இதுபோன்ற ஒவ்வொரு நண்பன்பனையும், திருமணத்திற்கு பிறகு தங்களை விட்டு பிரிந்து சென்று விடுகிறது. அவர்களின் நட்பு திருமணத்திற்கு பிறகு முற்றிலும் இல்லாமல் போய்விடுகிறது. இதுபோன்று இனி நடைபெற கூடாது என்ற எண்ணத்தில் இதனை முயற்சி செய்துள்ளோம். இது சாத்தியமானதா என்பது எங்களுக்கு தெரியாது இருந்தாலும் ஒரு எங்கள் நட்பை நண்பனின் வாழ்க்கை துணை புரிந்து கொள்ளுவார்கள் என்ற நம்பிக்கையில் இதனை செய்துள்ளோம்” எனத் தெரிவித்தனர்.

From around the web