ஆதாரத்தைக் காட்டுங்க! சீமான் வீட்டுக்குப் படையெடுக்கும் பெரியார் தொண்டர்கள்!!
Jan 8, 2025, 21:50 IST
தந்தை பெரியார் குறித்து இன்று மிகவும் கொச்சையாக பெண்களை அவமதிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். இதை பெரியார் ஆதரவாளர்கள் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கோவை கு.ராமகிருட்டிணன், தந்தை பெரியார் அவ்வாறு கூறியதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். நாளை (வியாழன்) காலை 10 மணிக்கு சீமான் வீட்டுக்கு நேரடியாகச் செல்லப் போகிறேன். சீமான் பெரியார் குறித்து பேசியதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார் கோவை கு.ராமகிருட்டிணன்.
சீமானைப் பேச்சை கண்டித்து திமுக, திராவிடர் கழகம் தலைவர்கள் மற்றும் பெரியார் ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.