கடைகள் வணிக நிறுவனங்கள் பெயர் பலகை! அமைச்சர் எச்சரிக்கை!!
Feb 14, 2025, 09:13 IST

தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது சட்டமாகும். ஆனால் சமீபகாலமாக இந்த சட்டத்தை மீறும் வகையில் கடைகளும் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்ப்பலகைகளை வைத்துள்ளனர். இது குறித்து அமைச்சர் சாமிநாதன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உடனடியாக பெயர்ப் பலகைகளில் தமிழில் பெயர் இடம்பெறாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். தாய்மொழியில் வணிகம் வேண்டும் என்பதற்காகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
உணவகங்கள், சலூன்கள் உள்ளிட்ட கடைகளில் ஊழியர்களும் தமிழில் கட்டாயம் பேச வேண்டும் என்றும் அமைச்சர் சாமிநாதன் நடவடிக்கை எடுப்பாரா? எங்கு போனாலும் ஒரே கியா, நஹி என இந்தியாகவே இருக்குது அமைச்சரே!