ரோட்டில் நின்ற சாம்சங் ஊழியர்களுக்கு லிப்ட் கொடுத்த டிரைவரின் அதிர்ச்சி செயல்.. அதிர்ச்சி வீடியோ!

 
Kanchipuram Kanchipuram

காஞ்சிபுரத்தில் சாம்சங் ஊழியர்கள் லிப்ட் கேட்டு ஏறி சென்ற மினி வேன் கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த நிலையில், பதறவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் பகுதியில் சாம்சங் தொழிலாளர்கள் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்திற்கு வரும் ஊழியர்கள் சுங்குவார்சத்திரம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த மினி வேன் டிரைவர் நான் அந்த வழியாக தான் செல்கிறேன் நீங்கள் வருகிறீர்களா என்று கேட்டு வலுக்கட்டாயமாக 13 பேரை ஏற்றியதாக கூறப்படுகிறது.

accident

இந்த நிலையில் அந்த மினி வேன் வாகனம் சாம்சங் தொழிற்சாலை அருகே வரும்போது அதன் டிரைவர் வாகனத்தை மிகவும் வேகமாக தாறுமாறாக இயக்கியுள்ளார். அப்போது சாம்சங் நிறுவனத்தின் தடுப்பு சுவரில் மோதி மினி வேன் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 


இந்த விபத்தில் காயமடைந்த 13 பேர் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு சிலர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web