அதிர்ச்சி.. 5 ரூபாய் மருத்துவர் மரணம்... சோகத்தில் மூழ்கிய மக்கள்...!

 
Srimushnam

ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்த 5 ரூபாய் மருத்துவர் தாத்தாச்சாரியார் காலமானார். அவருக்கு வயது 91.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்தவர் தாத்தாச்சாரியார். இவர் 1990-ம் ஆண்டு வரை ஸ்ரீமுஷ்ணம் அரசு மருத்துவமனை மருத்துவராக 24 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். 

அதன் பின்னர் தனது வீட்டிலேயே ஏழை எளிய மக்களுக்கு 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். தனது கடைசி மூச்சு வரை மருத்துவராக சேவையாற்றி வந்துள்ளார். இதனால் அப்பகுதி மக்களிடம் மிகவும் பிரபலமானார். மேலும் 5 ரூபாய் டாக்டர் எனவும் பெயர் பெற்றார்.

srimushnam

இவருக்கு 3 முறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவரின் சிகிச்சையால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக இவர் நேற்று உயிரிழந்தார். இவரது மரணம் அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவுக்கு மக்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

From around the web