மாணவர்களுக்கு ஷாக்.. இந்த 4 சனிக்கிழமைகளில் பள்ளி செயல்படும்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

 
school school

மிக்ஜாம் புயல் காரணமாக, தமிழ்நாட்டில் நாளை (ஜனவரி 6) பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. அதன்பிறகு டிசம்பர் 5-ம் தேதி ஆந்திராவில் புயல் கரையை கடந்தது. முன்னதாக புயல் காரணமாக பெய்த கனமழையால் தமிழ்நாட்டில் சென்னை உள்பட 4 மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை மொத்தமாக முடங்கியது.

school

ஒரு வாரத்துக்கு பிறகு தான் சென்னையில் முழுவதுமாக தண்ணீர் வடிந்து இயல்பு நிலை திரும்பியது. இந்த வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த மாதம் 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் 4 வாரங்கள் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாளை (ஜனவரி 6), வரும் 20-ம் தேதி, பிப்ரவரி மாதம் 3-ம் தேதி மற்றும் பிப்ரவரி 17 ஆகிய தேதிகளில் வரும் 4 சனிக்கிழகைகளில் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DPI

விரைவில் ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு முன்பு பாடங்களை நடத்தி முடிப்பதோடு, மாணவர்களை தேர்வுக்கு தயாராக்க வேண்டும். இதனால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் தற்போதைய சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் இந்த உத்தரவு என்பது சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

From around the web