அதிர்ச்சி.. பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை.. போக்சோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்!

 
Nellai

திருநெல்வேலி மாநகராட்சி பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தந்த புகாரில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் கல்லணை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி நெல்லை மாநகர காவல்துறை சார்பாக அப்பள்ளியில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

sexual-harrasment

அப்போது நிகழ்ச்சி முடிவில் தனியாக வந்த 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் அங்குள்ள காவல் உயர் அதிகாரியிடம் அப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாகவும் அடிக்கடி தொந்தரவு தருவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் பள்ளியில் பணியாற்றக்கூடிய ஆசிரியர் ஜோசப் செல்வின் (59) புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் மாணவிகள் அளித்த புகார் உண்மை என்பது தெரியவந்தது.

Nellai Town PS

இதையடுத்து ஆசிரியர் ஜோசப் செல்வின் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். ஆசிரியரே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web