அதிர்ச்சி.. மூளை காய்ச்சலால் பள்ளி சிறுவன் பலி.. விருதுநகரில் அருகே சோகம்!

சாத்தூர் அருகே 10 வயது சிறுவன் நிதிஷ்குமார் மூளைக்காய்ச்சலால் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் நிதிஷ்குமார்(10). இவர், மேட்டமலை பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வந்த நிதிஷ்குமாருக்கு சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், காய்ச்சல் குறையாததால் மேல் சிகிச்சைக்காக நிதிஷ்குமார் விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூளை காய்ச்சல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அங்கு இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சிறுவன் நிதிஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் பலியான பள்ளி மாணவரின் காய்ச்சலுக்கு காரணம் வீட்டின் அருகே அதிகளவில் பன்றிகள் வளர்பதை காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர். ஆகவே ஊராட்சி நிர்வாகம் கிராம பகுதியில் சுற்றி திரியும் பன்றிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.