அதிர்ச்சி... எம்.ஜி.ஆர் கையில் பாஜக கொடி?

 
BJP MGR

நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு பாஜக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் வேடமிட்ட நபர் கையில் பாஜக கொடியை வைத்துக் கொண்டு ஆடிப்பாடியது அதிமுக தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்காக அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள், தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. மேலும் கூட்டணி ஆட்சி என்ற விவகாரம் எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றியது போல் ஆகிவிட்டது. இப்போது பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர் வேடமிட்ட ஒருவர் பாஜக தலைவரை வரவேற்பதைப் போன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியால் அதிமுக தொண்டர்கள் மேலும் கொதிப்படைந்துள்ளனர்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த அண்ணாமலையை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கினால் தான் கூட்டணி என்று பிடிவாதமாக இருந்த அதிமுக தலைமை, இப்போது எம்.ஜி.ஆரே பாஜக தலைவரை வரவேற்பது போல் பாஜக கொடியை ஏந்தி நிகழ்ச்சி நடத்தியதற்கு என்ன செய்யப் போகிறார்களோ தெரியவில்லை.


 

From around the web