திருச்சியில் சிவாஜி சிலை... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
May 9, 2025, 06:21 IST

திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை அருகே நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் முழு உருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், நடிகர் பிரபு, அவரது சகோதரர் ராம்குமார், பிரபுவின் மகன் நடிகர் விக்ரம் பிரபு உள்ளிட்ட சிவாஜியின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம், பேரறிஞர் கனரக சரக்கு வாகன முனையம் திறப்பு விழா மற்றும் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி அடிக்கல் நாட்டுவிழா உள்ளிட்ட பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வந்திருந்தார். முதலமைச்சர் வரும் வழியெங்கும் பொதுமக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர்.