பள்ளிகளில் பாலியல் சேட்டை! வாழ்க்கையையே சோலி முடிக்கும் தமிழ்நாடு அரசு !!
Feb 18, 2025, 07:17 IST

பள்ளிகளில் பாலியல் சேட்டைகளில் சிக்கும் ஆசிரியர்கள், பணியாளர்களின் கல்வி சான்றிதழ்களை ரத்து செய்யும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது.
பள்ளிகளில் பணிக்கு சேரும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு போலீஸ் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படுகிறது. குற்றப் பின்னணி இருப்பவர்கள் பள்ளிப் பணியில் சேர அனுமதி மறுக்கப்படும். போக்சோ குற்றத்தில் தண்டனை பெற்றவர்களின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.