தீவிர காய்ச்சல்... 8 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு!! பழவேற்காடு அருகே சோகம்!

 
baby

பழவேற்காடு அருகே, காய்ச்சல் காரணமாக எட்டு மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு லைட்அவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு 8 மாத ஆண் குழந்தைக்கு இருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு குழந்தைக்கு திடீரென்று காய்ச்சல், வாந்தி பேதி ஏற்பட்டது. இதையடுத்து அந்த குழந்தையை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 

Fever

பின்னர் பழவேற்காடு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு போதிய மருந்து இல்லை என்று கூறி குழந்தை பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காய்ச்சலுக்கு குழந்தை பலியானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே குழந்தைக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி பழவேற்காடு, பொன்னேரி அரசு மருத்துவமனை மருத்துவர்களுடன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

Thirupalaivanam PS

குழந்தை இறந்தது தொடர்பாக திருப்பாலைவனம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே எந்த வகையான காய்ச்சல் என்பது குறித்து தெரியவரும் என கூறினர்.

From around the web