பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து.. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

 
Exam

தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் 15-ம் தேதி தொடங்க இருந்த நிலையில் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 500-க் கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவை அணைத்தும் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இயங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் வருகிற 15-ம் தேதி தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

Exam

இந்த நிலையில், இந்த தேர்வுகள் தற்போது தள்ளி வைக்கப்பட்டு, ஜூன் 6-ம் தேதி தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட இருக்கின்றன.

தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெரும்பாலும் பொறியியல் கல்லூரிகளில் தான் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாக்கப்பட்ட இடங்களில் மாணவர்களோ அல்லது வெளி ஆட்களோ அனுமதிக்கப்படுவது கிடையாது.

Anna-University

இந்த நிலையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது என்பது கடினமாக இருக்கும் என்பதால் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. எனவே வருகிற 15-ம் தேதி பொறியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் இல்லை என்றும் அது ஜூன் 6-ம் தேதி தொடங்கி நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

From around the web