வடை சுட்டுக் கொண்டிருக்கிறார் சீமான்! பங்கம் செய்த ப்ளூசட்டை மாறன்!!

கடந்த சில வாரங்களாக தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். பெரியாரிஸ்டுகளும் திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் கடுமையாக சீமானை எதிர்த்து வருகின்றனர். சீமான் வீட்டை முற்றுகையிட்டும் வருகின்றனர்.
இந்நிலையில் சீமான் பெரியார் பற்றி கூறியதற்கு, வடை சுட்டுக் கொண்டிருக்கிறார் சீமான் என்று பிரபல சினிமா விமர்சகரும் சமூக ஆர்வலருமான ப்ளூசட்டை மாறன். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் கூறியிருப்பதாவது,
”ஐயா ஓடி வாங்க. அம்மா ஓடி வாங்க. தமிழை சனியன் என்றும், காட்டுமிராண்டி மொழி என்றும் பெரியார் கூறினாரே.. இதை தட்டிக்கேட்க யாருமே இல்லையா என கடந்த சில வாரங்களாக அண்ணன் வடை சுட்டுக்கொண்டு இருக்கிறார். அவர் ஏன் அப்படி சொன்னார் என்பது இவருக்கு நன்றாக தெரியும். ஆனால் தற்போது திடீர் சங்கியாகி மாறிவிட்டதால்.. அதை சொல்லமாட்டார்..
நம் வீட்டில் சொல்பேச்சு கேளாத பிள்ளைகளை பார்த்து 'உன்னைத்தாத்த் பெத்ததுக்கு நாலு எருமையை பெத்திருக்கலாம்' என்றால் என்ன அர்த்தம்? பிள்ளைகளை வீட்டை விட்டு துரத்தி. எருமையை வாங்கி வளர்க்க போகும் கல்நெஞ்ச பெற்றோர்கள் என கூவுவது கேனைத்தனம்தானே? அதுபோலத்தான் அண்ணனின் வடைகளும்.
பெரியார் சொன்னதன் அர்த்தம் இதுதான் : ” இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் பழைய கட்டுக்கதைகள், புராண, இலக்கிய பெருமைகளை மட்டுமே தமிழின் பெருமையாக பேசுவீர்கள்? ஆதிமனிதன் காட்டுமிராண்டி யாக இருந்த காலத்திலேயே தோன்றிய தொன்மையான மொழியல்லவா தமிழ். அதை காலத்திற்கேற்ப பிறமொழிக்கலப்பினை நீக்கி, அறிவியல் சொற்களை சேர்த்து வளமைப்படுத்த வேண்டாமா?
குறிப்பிட்ட சமூகம் ஆங்கிலம் கற்று உயர் பதவியில் இருப்பதும், வெளிநாட்டு வேலைக்கு செல்வதுமாக முன்னேறும்போது.. நமக்கு தமிழ் மட்டுமே போதுமா? ஆகவே ஆங்கிலம் கற்பதும் அவசியம்,” எனக்கூறினார்.
இப்படியான அர்த்தத்தில் பெரியார் சொன்னது அண்ணனுக்கும் நன்கு தெரியும். ஆனால் வேண்டுமென்றே.. அர்தத்தை விட்டுவிட்டு ஒன்லைன் வரியை மட்டும் தொங்கிக்கொண்டு..மக்களை ஏமாற்றுகிறார். இளைஞர்களை ஆடு மாடு மேய்க்காதீர். படியுங்கள் என்றார் பெரியார். ஆனால் அவர்களை ஆடுமாடு மேய்க்க சொல்பவர்தான் இந்த சிரியார். நெக்ஸ்ட் வடையை சுட்டு தள்ளுங்கண்ணே. அதுவும் எப்படி இருக்குன்னு பாப்போம்.”
இவ்வாறு ப்ளுசட்டை மாறனின் எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளது. உடன் வடை சுட்டுக்கொண்டிருப்பவர் ஒருவருடைய படத்தையும் இணைத்துள்ளார்.
அண்ணனின் சூடான வடைகள்:
— Blue Sattai Maran (@tamiltalkies) January 22, 2025
ஐயா ஓடி வாங்க. அம்மா ஓடி வாங்க. தமிழை சனியன் என்றும், காட்டுமிராண்டி மொழி என்றும் பெரியார் கூறினாரே.. இதை தட்டிக்கேட்க யாருமே இல்லையா என கடந்த சில வாரங்களாக அண்ணன் வடை சுட்டுக்கொண்டு இருக்கிறார்.
அவர் ஏன் அப்படி சொன்னார் என்பது இவருக்கு நன்றாக தெரியும்.… pic.twitter.com/BKpRBeQYij